29-09-24 & 30-09-24 ஆம் தேதிகளில் சென்னை Trade Centre Nandhambakkam International Mining Expo and Conclave கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்நிகழ்ச்சி சம்பந்தமாக 05-08-24 அன்று தென்காசியில் உள்ள TENSASIA சங்க அலுவலகத்தில் சங்க செயலாளர் திரு.ஜெகதீஷ் ,சங்க பொருளாளர் திரு.ஆறுமுகசாமி , திரு.தென்காசி பாய் , மற்றும் தென்காசி மண்டல செயலாளர் திரு.கேசவன் ஆகியோரோடு தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.இரா.ஜெயராமன் ,செயலாளர் திரு.ஜேம்ஸ் செயற்குழு உறுப்பினர் திரு.காமராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டனர்!

அதனை தொடர்ந்து திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களான ( திருநெல்வேலி,திண்டுக்கல், கரூர்,விருதுநகர்,தென்காசி,தூத்துக்குடி,மதுரை,கன்னியாகுமரி) ஆகிய மாவட்டங்களின் சார்பில் தென்காசியில் (6-09-24) அன்று சுரங்க பாதுகாப்பு வார விழா நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்விழாவினை திருநெல்வேலி மண்டலத்தின் செயலாளர் திரு.கேசவன் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும்,உறுதியுடன், மிகச் சிறந்த முறையில் நடத்திட தென்காசி மாவட்டமே முழு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்தார்.



இன்று (12-08-24) காலை 11 மணியளவில் கரூர் கொங்கு மெஸ் ல் கரூர் மாவட்டத்தின் சார்பில் 9 மாவட்டங்கள்

1. கரூர், 2. நாமக்கல், , 3. சேலம், 4. ஈரோடு, 5. கோயம்புத்தூர், , 6. திருப்பூர், , 7. பெரம்பலூர், 8. திண்டுக்கல், 9. திருச்சி . ஆகிய மாவட்டதினுடைய நிர்வாகிகள் சுமார் 200 பேர் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்

இக்கூட்டத்தில்

1. குவாரி தொழிலை தமிழக அரசின் அறிவுறுத்தலின்படியும்,அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

2.அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட விலையை குறைக்காமல் தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

3.அனைத்து குவாரிகளில் மத்திய அரசின் சுரங்க பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

4.மத்திய அரசின் சட்டப்படி LIN நம்பர் 106/2b படி குவாரிகளை இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது

5.செப்டம்பர் 29-30 ஆம் தேதிகளில் சென்னையில் Trade Centre Nandhambakkam கத்தில் International Mining Expo and Conclave கூட்டம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கும் அனைத்து மாவட்ட குவாரி உரிமையாளர்கள், மேனஜர்ஸ்,Foreman,Class-1 Manager ஆகியோர் அனைவரும் கலந்துக் கொண்டு இன்றைய காலக்கட்டத்தில் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் expoவில் நடக்கும் seminar களில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

6.புதுக்கோட்டை, மாவட்டங்களில் தற்போதைய சூழலை சரி செய்ய ஒரே விலையினை நிர்ணயத்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


மிக முக்கியமாக இந்த கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் குவாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குவாரிகள் மற்றும் கிரஷர்களை அரசாங்க உத்தரவு படி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனவும், அதனை கண்டிப்பாக சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டி மாவட்ட கூட்டங்களை உடனடியாக நடத்தி இதற்கான நிரந்தர தீர்வுக்கான வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மாநில குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தை இம்மாத இறுதிக்குள் திருச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அனைத்து குவாரி உரிமையாளர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஏற்றவாறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் திரு.K.சின்னசாமி ,மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.ஜெயராமன் ,மாநில செயலாளர் திரு.முத்து கோவிந்தன் ,மாநில பொருளாளர் திரு.K.பாலசுப்பிரமணியம் ,மாநில இணை செயலாளர் திரு.S.பாலவிக்னேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தை கரூர் மண்டல தலைவர் திரு.P.சுப்பிரமணி ,பொருளாளர் திரு.K.தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மிகச்சிறந்த முறையில் மத்திய அசைவ விருந்துடன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இவண்
சந்தோஷ் ஆ.தாமோதரன்
திருவள்ளூர் மாவட்ட தலைவர்.



29-09-24 & 30-09-24 ஆம் தேதிகளில் சென்னை Trade Centre Nandhambakkam International Mining Expo and Conclave கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது அது சம்மந்தமாக.

31-07-24 அன்று கிருஷ்ணகிரி தமிழ்நாடு சுற்றுலா ஹோட்டலில் சேலம் திரு.ராஜா , நாமக்கல் திரு.மணி , தர்மபுரி பாய் , திரு.செந்தில் அவர்களுடன் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.இரா.ஜெயராமன் ,செயலாளர் திரு.ஜேம்ஸ் பொருளாளர் திரு.மகேஷ் செயற்குழு உறுப்பினர் திரு.காமராஜ் திருவள்ளூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும்,தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திரு.ஆ.தாமோதரன் @ சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டனர்! அதனை தொடர்ந்து மத்தியம் சுமார் 12 மணியளவில் ஓசூரில் உள்ள ASR Parklane, Bergamont Hotel லில் ஓசூர் மாவட்ட தலைவர் திரு.சம்பங்கி, செயலாளர் திரு.பிரேம்நாதன்,பொருளாளர் திரு.ஆனந்தன் அவர்களை திரு.இரா.ஜெயராமன் தலைவர்(TNMSA), திரு.ஜேம்ஸ் செயளாலர்(TNMSA) திரு.மகேஷ் பொருளாளர்(TNMSA) திரு.ஆ.தாமோதரன் @ சந்தோஷ் செயற்குழு உறுப்பினர்(TNMSA), திரு.காமராஜ் செயற்குழு உறுப்பினர் (TNMSA) ஆகியோர் சந்தித்து சேலம் ஜோன் ல் நடைபெற இருக்கும் சுரங்க பாதுகாப்பு ஜோனல் கூட்டதை ஓசூரில் சிறப்பாக நடைபெறுவதற்கு உண்டான வழிமுறைகளை ஆலோசித்தனர். மேலும் இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.இரா.ஜெயராமன் அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பின் ஓசூர் மாவட்டத்தின் சார்பாக சென்னை Trade Centre,நந்தம்பாக்கதில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள International Mining Expo and Conclave வில் குவாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி மேனஜர்கள்,Foremans, Class 1 managers உள்பட குறைந்த பட்சம் 100 பேர் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தருவோம் என்று உறுதி செய்தனர்.


தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் ஓசூர் கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு( சேலம் ஜோன் ) இணைந்து 64 ஆவது சுரங்க பாதுகாப்பு விழாவை 1-09-2024 அன்று மாலை 4 மணியளவில் ஹோட்டல் ஹாலிடே ரிசார்ட் ல் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர். இவ்விழாவினை ஓசூர் கிரஷர் உரிமையாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு S.R.சம்பங்கி தலைமையில், சங்க துணைத் தலைவர் திரு மது , செயலாளர் திரு பிரேம்நாத் , பொருளாளர் திரு ஆனந்த் குமார் ஆகியோர் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்தினர். இச்சிறப்பு மிக்க விழாவினை பொறுப்பேற்று சேலம் மண்டலத்தின் மாவட்டங்களை ஒருங்கிணைத்து திரு சீனிவாசலூ மற்றும் மண்டல செயலாளர் திரு நடராஜன் ஆகியோர் திறம்பட செயல்படுத்தினர். இவ்விழாவில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு இயக்குனர் திரு T.R கண்ணன் அவர்கள், இணை இயக்குனர் திரு மகேஷ் சாட்லா அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத் தலைவர் & தமிழ்நாடு குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா ஜெயராமன் அவர்கள், தமிழ்நாடு குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு K சின்னசாமி அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திரு ஜேம்ஸ் அவர்கள், பொருளாளர் திரு மகேஷ்,சேலம் திரு ராஜா , நாமக்கல் திரு மணி , தர்மபுரி திரு அலாயுதின் பாஷா, கப்பல் திரு நந்தகுமார் , திருவள ்ளூர் திரு சந்தோஷ் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட சிறு சுரங்கம் & கல் கிரஷர் தொழில் சங்கம் (திருநெல்வேலி ஜோனல்) இணைந்து 64வது சுரங்க பாதுகாப்பு இன்று 6-09-24 அன்று மாலை 4 மணியளவில் குற்றாலத்தில் உள்ள சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு துறை இயக்குனர் திரு T.R. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு துறை இணை இயக்குனர் திரு மகேஷ் சாட்லா அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு குவாரி,கிரஷர் & லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு இரா ஜெயராமன் அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திரு ஜேம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் . இவ்விழாவினை ( TENSASIA) சங்கத்தின் சார்பாக அதன் கௌரவத் தலைவர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு S.பழனி நாடார் அவர்கள், சங்கத்தின் தலைவர் திரு R.N. குமார் அவர்கள், துணைத் தலைவர் திரு S. காசி பாண்டியன் அவர்கள், செயலாளர் திரு AC. ஜெகதீசன் அவர்கள், பொருளாளர் திரு S. சையது இப்ராஹிம் அவர்கள், துணை செயலாளர் திரு K. ஆறுமுகசாமி ஆகியோர் மிகச் சிறந்த முறையில் இரவு விருந்துடன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இவ்விழாவில் கரூர் திரு சிவானந்தம் அவர்கள், திரு குணசேகரன் அவர்கள், தூத்துக்குடி தலைவர் திரு காசிராஜன் அவர்கள், திரு கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு இரா. ஜெயராமன் அவர்கள் இந்நிகழ்ச்சியை கட்டுக்கோப்போடு மிக சிறந்த முறையில் மேற்கொண்ட சங்கத்தின் செயலாளர் திரு AC.ஜெகதீசன் அவர்களை பாராட்டினார்.












தேனி மாவட்ட வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆயுர் கவுண்ட்டி ரிசார்ட், சின்னக்கானல் மூணார் ல் 11-09-24 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தின் தலைவர் திரு P.வெடி ராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார், செயலாளர் திரு K. ஜெகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில சங்க தலைவர் திரு K சின்னசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மாநில சங்க பொதுச் செயலாளர் திரு. இரா ஜெயராமன் அவர்கள் சிறப் புறையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில சங்க செயலாளர் திரு. G. முத்து கோவிந்தன் அவர்கள் , மாநில சங்க பொருளாளர் திரு K. பாலசுப்பிரமணியம் அவர்கள், கோயம்புத்தூர் திரு கப்பல் நந்தகுமார் அவர்கள், மதுரை மண்டல தலைவர் திரு லியாகத் அலிகான் அவர்கள், மதுரை மாவட்ட செயலாளர் திரு கேதர்நாத் அவர்கள் திண்டுக்கல் மண்டல இணைச் செயலாளர் திரு M. ரமேஷ் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு A. சந்தோஷ் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தேனி மாவட்டத் துணைத் தலைவர் திரு P. தண்டபாணி அவர்கள், பொருளாளர் திரு M. சின்னராஜா அவர்கள் மற்றும் தேனி திரு A குமார் (K.M.C. Blue Metals ) ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்.









மாநில Core Committee கூட்டமானது இன்று 18-09-24 சுமார் பத்து மணியளவில் ஹோட்டல் சவேரா சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம் மாநில சங்கத் தலைவர் திரு K சின்னசாமி அவர்கள், பொதுச் செயலாளர் திரு இரா ஜெயராமன் அவர்கள், செயலாளர் திரு G முத்து கோவிந்தன் அவர்கள், பொருளாளர் திரு K பாலசுப்ரமணியம் அவர்கள், கிருஷ்ணகிரி திரு S பால விக்னேஷ் அவர்கள்,கரூர் மண்டல தலைவர் திரு சுப்பிரமணியம் அவர்கள், கரூர் மாவட்ட தலைவர் திரு சேரன் ராஜேந்திரன் அவர்கள்,செயலாளர் திரு தங்கராஜ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு தனசேகர் அவர்கள், செயலாளர் திரு உதய ராஜன் அவர்கள், திரு முரளி அவர்கள் தேனி மாவட்ட தலைவர் திரு ஜெகநாதன் அவர்கள், மாநில இணைச் செயலாளர் திரு யோகேஸ்வரன் அவர்கள், ஈரோடு மாவட்ட பொருளாளர் திரு ஜெகதீஷ் அவர்கள், சேலம் மாவட்ட தலைவர் திரு ராஜா அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திரு முருகானந்தம் அவர்கள் திண்டிவனம் மாவட்ட தலைவர் திரு பாபு அவர்கள், செயலாளர் திரு சங்கர் அவர்கள்,கள்ளக்குறிச்சி திரு சுதாகர் அவர்கள்,தென்காசி திரு ஆறுமுகசாமி அவர்கள்,ராணிப்பேட்டை திரு பாஸ்கர் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு சந்தோஷ் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு K சின்னசாமி அவர்கள், பொதுச் செயலாளர் திரு இரா ஜெயராமன் அவர்கள், செயலாளர் திரு முத்து கோவிந்தன் அவர்கள், பொருளாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள், கரூர் திரு சுப்பிரமணியம் அவர்கள்,கரூர் திரு சேரன் ராஜேந்திரன் அவர்கள், காஞ்சிபுரம் திரு தனசேகர் அவர்கள், செயலாளர் திரு உதய ராஜன் அவர்கள் தேனி திரு ஜெகநாதன் அவர்கள், விழுப்புரம் திரு பாலு அவர்கள், சேலம் திரு ராஜா அவர்கள், தர்மபுரி திரு அலாயுதின் பாஷா அவர்கள், தூத்துக்குடி திரு முருகானந்தம் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் இம்மாதம் 29,30 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள Trade Center ல் International Mining Expo நிகழ்ச்சியினை எவ்வாறு ஒருங்கிணைந்து நடத்துவது என்பதை பற்றியும், மாவட்ட வாரியாக கலந்து கொள்ளும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், class 1 மேனேஜர்கள், Foreman களின் விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியினை எவ்வாறு அனைவருடைய ஆதரவோடு மிகுந்த கட்டுக்கோப்புடன் சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட பிரதிநிதிகள் 29,30 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் International Mine Expo நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 90% சதவிகித குவாரி& கிரசர் உரிமையாளர்களையும்,மற்றும் Class-1 Manager கள், Foreman களையும் பங்கு பெற செய்வதாக உறுதி அளித்தனர், அவ்வாறு பங்குபெறும் அனைவருக்கும் சிறந்த முறையில் உபசரிப்பு வழங்கப்படும் என்று பொறுப்பினை Core Committe உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.


















தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் ஓசூர் கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு( சேலம் ஜோன் ) இணைந்து 64 ஆவது சுரங்க பாதுகாப்பு விழாவை 1-09-2024 அன்று மாலை 4 மணியளவில் ஹோட்டல் ஹாலிடே ரிசார்ட் ல் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர். இவ்விழாவினை ஓசூர் கிரஷர் உரிமையாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு S.R.சம்பங்கி தலைமையில், சங்க துணைத் தலைவர் திரு மது , செயலாளர் திரு பிரேம்நாத் , பொருளாளர் திரு ஆனந்த் குமார் ஆகியோர் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்தினர். இச்சிறப்பு மிக்க விழாவினை பொறுப்பேற்று சேலம் மண்டலத்தின் மாவட்டங்களை ஒருங்கிணைத்து திரு சீனிவாசலூ மற்றும் மண்டல செயலாளர் திரு நடராஜன் ஆகியோர் திறம்பட செயல்படுத்தினர். இவ்விழாவில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு இயக்குனர் திரு T.R கண்ணன் அவர்கள், இணை இயக்குனர் திரு மகேஷ் சாட்லா அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத் தலைவர் & தமிழ்நாடு குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா ஜெயராமன் அவர்கள், தமிழ்நாடு குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு K சின்னசாமி அவர்கள், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் திரு ஜேம்ஸ் அவர்கள், பொருளாளர் திரு மகேஷ்,சேலம் திரு ராஜா , நாமக்கல் திரு மணி , தர்மபுரி திரு அலாயுதின் பாஷா, கப்பல் திரு நந்தகுமார் , திருவ ள்ளூர் திரு சந்தோஷ் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்